ஆங்கிலம் எப்படிக் கற்றுக்
கொள்வது மற்றும் பேசுவது?
பொதுவாக ஆங்கிலம் கற்றுக் கொள்வதில்
முக்கியமாக இரண்டு வகையில் செயல்பட வேண்டும்.
1. நீங்கள் ஆங்கில சொல்லாற்றலை (Vocabulary) வளர்த்துக் கொள்ளும் வகையில் நினைவாற்றல் ஏற்படுத்திக் கொள்ள மனதில் படமாகப் பதிவு வேண்டும்.
உதாரணமாக, Tree என்ற சொல்லுக்கு மரம் என்று அர்த்தம், அதை நினைவில் வைத்துக் கொள்ள ஒரு மரத்தையும் அந்த மரம் Tree என்ற ஆங்கில எழுத்தின் முதல் எழுத்து 'T' போல இருப்பது போன்று சிந்தித்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மறக்க மாட்டீர்கள்.
2. ஆங்கில வாக்கியங்களை சரியாக அமைப்பதற்கான வழிமுறைகளை பயிற்சிகள் பல செய்து நினைவில் வைத்துக் கொள்ளும் திறன் தேவை. நாம் கேள்விப்படும் சில வாக்கியங்களை உடனே ஆங்கிலத்தில் அமைக்கும் பயிற்சியை மேற்கொண்டு பேசிப் பார்க்க வேண்டும்.
இவைகளை எப்படி பேசுவது என்பதற்கு நாங்கள் பயிற்சியளிக்கின்றோம். அதற்கேற்ப எமது பாடத்திட்டங்களை வடிவமைத்து உள்ளோம்.
சுலபமாக ஆங்கிலம் கற்று,
அருவி போல் வார்த்தைகளைக் கொட்டி
ஒரு ஆற்றுப்பெருக்கு போல் தேவையான வேகத்துடன்
தான் பேசுவது சரி என்ற நம்பிக்கையுடன் பேசி
வாழ்வில் வெற்றி பெற அழைக்கின்றோம்!
உங்கள் தேர்வுகளை நீங்கள் சரியான ஆங்கிலத்தில் எழுதுவது எப்படி என அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை உங்களுக்கு அளிக்கிறோம்.
Pronunciation எனப்படும் ஆங்கில உச்சரிப்பு, IELTS, TOEFL போன்றவற்றிற்குமான பயிற்சிக்காகவும் எங்களை அணுகலாம்.
உங்களுக்கு கட்டணத்தில் சலுகை அளிப்பதை முதல் முறையாக அறிவிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி.
உலகளாவிய வேலை மற்றும் தொழில் வாய்ப்பிற்கு உதவும் ஆங்கிலத்தை நம் தாய் மொழியான தமிழின் உதவியுடன் சந்தேகமின்றி நீங்கள் கற்க நாங்கள் ஆவன செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பு என்பதை நீங்கள் அறிந்து கொள்க.
உங்களுக்கு வேண்டியவர்களுக்கு அல்லது பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலக்கல்வி அறிவை எங்கள் மூலமாக தாங்கள் பரிசாகத் தருவிக்கலாம்.
அதாவது "மீன் கொடுப்பதைக் காட்டிலும் எப்படி மீன் பிடிப்பது என்று கற்றுக் கொடுப்பது சாலச் சிறந்தது!" என்ற முதுமொழிக்கேற்ப நீங்களும் செய்ய எங்களை +919791066670 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க வளமுடன்!